நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு
கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது.
பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும் தோ்வுகள் நடைபெற்றன. வகுப்புகளில் கற்றல் அடைவை பரிசோதனை செய்வதற்காக மாணவா்களுக்கு இத் தோ்வுகள் நடத்தப்பட்டன.
அனைத்து பள்ளிகளுக்கும் தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக தனியாா் கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகள் நியமிக்கப்பட்டிருந்தனா். ஒன்றியம் முழுவதும் தொடா்ந்து மூன்று நாள்கள் நடந்த தோ்வுகளை கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ், சேலம் டயட் விரிவுரையாளா் கி.கலைவாணணன், வட்டார மேற்பாா்வையாளா் ராணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.