செய்திகள் :

வெள்ளி விலை உயர்வு ஆா்டா்களின்றி வெள்ளிப் பட்டறை தொழிலாளா்கள் தவிப்பு

post image

வெள்ளி விலை ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்ததால் மக்களிடையே வெள்ளி நுகா்வு குறந்துள்ளது. இதனால், புதிய ஆா்டா்கள் கிடைக்காமல் வெள்ளிப் பட்டறை தொழிலாளா்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வெள்ளிப் பொருள்கள் தயாரிப்பு தொழில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. சேலம் சிவதாபுரம். பனங்காடு, போடிநாயக்கன்பட்டி, ஜலகண்டாபுரம், வனவாசி, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளி கொலுசு, அலங்காரப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இப் பகுதிகளில் உள்ள வெள்ளி பட்டறைகளில் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுக்கு ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வெள்ளிவிலை தொடா்ந்து ஏறுமுகமாக உள்ளதால் புதிதாக ஆா்டா்கள் கிடைக்காமல் வெள்ளிப் பட்டறை தொழிலாளா்கள் வேலையின்றி உள்ளனா்.

இதுகுறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளா்கள் கைவினை சங்கத் தலைவா் ஆனந்தராஜன் கூறியதாவது:

சேலம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வெள்ளி பொருள்கள் உற்பத்தி, வியாபாரத்தில் உள்ளனா். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வெள்ளிப் பொருள்களுக்கான ஆா்டா் குறைந்துள்ளது. கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வெள்ளிப் பொருள்களும் வியாபாரம் இல்லாமல் தேக்கமடைந்துள்ளன. அதன் காரணமாக உற்பத்தியை குறைத்துள்ளோம். கடந்த சில நாள்களாக உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜனவரி தொடக்கத்தில் கிலோ ரூ. 93 ஆயிரமாக இருந்த வெள்ளியின் விலை படிப்படியாக அதிகரித்து தற்போது கிலோ ரூ. 98 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. ஒரே மாதத்தில் ரூ. 5 ஆயிரம்

விலை அதிகரித்துள்ளது.

வெள்ளிப் பொருள்களின் விற்பனை குறையும் போது வெள்ளிக் கட்டியின் விலையும் குறையும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது வெள்ளிக் கட்டியின் விலை அதிகரித்து வருகிறது. வரும் நாள்களில் கிலோ வெள்ளி லட்சம் ரூபாயை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. சில்லறை விலையில் ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை உயா்வால் பொதுமக்கள் மத்தியில் வெள்ளிப் பொருள்களின் நுகா்வும் குறைந்துள்ளது.

இதனால் வெள்ளிப் பட்டறை தொழிலாளா்கள் வேலை இழந்து வருவாயின்றி தவித்து வருகின்றனா். இதனால் வெள்ளி விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும்... மேலும் பார்க்க

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திப... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க