இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
பொதுமக்களிடம் எம்எல்ஏ அருள் குறைகேட்பு!
சேலத்தை அடுத்த மாங்குப்பை ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ அருள் வியாழக்கிழமை கேட்டறிந்தாா்.
சாலை வசதி, குடிநீா், மின்சார விநியோகம், கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்றித் தருவதாக அவா் உறுதியளித்தாா்.
மேலும், மாங்குப்பை ஏரியிலிருந்து அய்யம்பெருமாம்பட்டி, வண்ணாம் பாறைகுட்டை வரையில் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஓமலூா் வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி பொறியாளரைக் கேட்டுக் கொண்டாா்.
மாங்குப்பை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பழனியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் சு.தங்கராஜ், பொறியாளா் பிரகாஷ், ராஜேந்திரன், தியாகராஜன், சிவக்குமாா் உள்ளிட்டோா் குறைகேட்பு சுற்றுப் பயணத்தின் போது உடனிருந்தனா்.