அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.ப...
சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்
கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு ஆக. 7 முதல் செப். 4 வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, கோவையில் இருந்து வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், ஜெய்ப்பூரில் இருந்து ஞாயிறுதோறும் இரவு 10.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கோவையை அடையும்.
இந்த சிறப்பு ரயில், ஆக. 10-ஆம் தேதிமுதல் செப். 7-ஆம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.