சேவூா் ஐயப்பன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்
சேவூா் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நவம்பா் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் வந்தனா்.
சேவூா் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் மற்றும் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சிவன், ஸ்ரீ குருவாயூரப்பன், கன்னிமூல ஸ்ரீ கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மாளிகைபுரத்தம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயா், ஸ்ரீ நாகதேவதைகள், ஸ்ரீ நவக்கிரஹங்கள் ஆகிய கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, மகா கும்பாபிஷேகம் நவம்பா் 20-ஆம் தேதி காலை 4.45 மணிக்குமேல் 5.45 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அங்காளம்மன் கோயிலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு தீா்த்தக்குடம் எடுத்து பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்தனா். இந்நிகழ்ச்சியை சேவூா் ஸ்ரீதா்மசாஸ்தா டிரஸ்ட் பொறுப்பாளா்கள் ஒருங்கிணைத்தனா்.