செய்திகள் :

சைபர் குற்றம்: "ஆன்லைனில் கேம் விளையாடிய என் மகளிடம் நிர்வாண போட்டோ கேட்டனர்" - அக்‌ஷய் குமார் வேதனை

post image

நாடு முழுவதும் சைபர் கிரிமினல் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் மக்கள் சைபர் கிரிமினல்களிடம் பணத்தை இழப்பது நிற்கவில்லை.

மும்பை போலீஸ் தலைமை அலுவலகத்தில் இணையத்தள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய அக்‌ஷய் குமார், ''எனது வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகள் வீட்டில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தார்.

சில வீடியோ கேம்களில் நீங்கள் கண்ணுக்குத் தெரியாத வேறு ஒரு நபருடன் ஆன்லைனில் விளையாட முடியும். அப்படி விளையாடிக்கொண்டிருக்கும் போது எதிர்முனையிலிருந்து உங்களுடன் விளையாடிக்கொண்டிருப்பவர் உங்களுக்கு மெசேஜ் அனுப்பலாம்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

எனது மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்முனையில் இருந்து விளையாடிக்கொண்டிருந்தவர் ஆணா, பெண்ணா என்று கேட்டு மெசேஜ் அனுப்பினார். எனது மகள் தான் பெண் என்று பதில் கொடுத்தார்.

உடனே அந்த நபர் உனது நிர்வாண புகைப்படத்தை அனுப்ப முடியுமா என்று கேட்டார். உடனே எனது மகள் வீடியோ கேமில் இருந்து வெளியில் வந்துவிட்டு, எனது மனைவியிடம் வந்து சொன்னார். இப்படித்தான் ஆன்லைன் குற்றங்கள் தொடங்குகின்றன. இதுவும் ஒரு சைபர் குற்றம் தான். எனவே 7வது வகுப்பிலிருந்து 10வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை சைபர் வகுப்புகளுக்கு வகை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். வாரத்தில் ஒருநாள் சைபர் வகுப்புகள் நடத்தி இணையத்தளக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இணையத்தளக் குற்றங்கள் தெருக்களில் நடக்கும் குற்றங்களை விடப் பெரிய குற்றமாக மாறக்கூடும். எனவே சைபர் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது அவசியம். பள்ளிப் பாடத்திட்டத்தில் சைபர் கல்வியைச் சேர்ப்பதன் மூலம் வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகை ராணி முகர்ஜி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், டிஜிபி ரேஷ்மி சுக்லா உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

AI, DeepFake வீடியோக்கள் வெளியிட்ட யூடியூப் சானல்கள்; ரூ.4 கோடி கேட்டு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் வழக்கு

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது புகைப்படம், பெயர் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்... மேலும் பார்க்க

Asha Bhosle: `ஆஷா போஸ்லே குரலைப் பயன்படுத்த தடை' - மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாட... மேலும் பார்க்க

உலகின் பணக்கார நடிகரான ஷாருக் கான் - பின்னுக்குத் தள்ளப்பட்ட நடிகர்கள்

உலக பணக்காரர்கள் பற்றிய விபரத்தை ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக நடிகர் ஷாருக்கான் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்த... மேலும் பார்க்க

Akshay Kumar: "20 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்குப் பிறகு உண்பதில்லை" - அக்‌ஷய் குமாரின் டயட் ப்ளான்

சமீபத்தில் திரையுலகில் 38 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அக்‌ஷய் குமார், தனது தொழிலில் இவ்வளவு நாட்கள் வெற்றியுடன் இருப்பதற்கு உதவிய தனது பழக்க வழக்கங்கள் பற்றி மனம் திறந்துப் பேசியிருக்கிறார். நடிகர் அ... மேலும் பார்க்க

``சல்மானுக்கு எதிராக பேசியதால் புறக்கணித்தனர்; ஆனால் இன்று" - ரூ.1200 கோடி பிசினஸில் விவேக் ஓபராய்

சல்மான் கானை விமர்சித்த விவேக் ஓபராய் பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் காதல் அனைவரும் அறிந்த ஒன்று. ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானுடன் சண்டையிட்டு பிரிந்த பிறகு, சில காலம... மேலும் பார்க்க

‘நியாயமற்றது என்றார்'- தன்னுடைய மகள் தேசிய விருது விழாவில் பங்கேற்க முடியாதது குறித்து ராணி முகர்ஜி

71-வது தேசிய விருதுகள் நிகழ்வு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றிருந்தது. ஷாருக் கான், மோகன் லால், ஜி.வி. பிரகாஷ் உட்பட தேசிய விருது அறிவிக்கப்பட்ட அத்தனை திரைக்கலைஞர்களும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார... மேலும் பார்க்க