செய்திகள் :

சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் -வெளியுறவு அமைச்சகம்

post image

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.13,000 கோடி கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.

நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்துள்ள மெஹுல் சோக்ஸி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்று வெளியுறவு விவகாரங்கள் தொடா்பான கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் பதிலளித்தாா்.

மெஹுல் சோக்ஸி குறித்த கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையின் அடிப்படையில், மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்திய நீதிமன்றத்தில் அவா் விசாரணையை எதிா்கொள்ளும் வகையில், அவரை நாடு கடத்துவது குறித்து பெல்ஜியத்துடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்’ என்றாா்.

மீண்டும் கைலாஷ் மானசரோவா் யாத்திரை: இந்தியா-சீனா இடையே கடந்த அக்டோபரில் கையொப்பமான ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கைலாஷ்- மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவும் சீனாவும் பரிசீலித்து வருகின்றன.

இதுகுறித்து தெரிவித்த ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘கைலாஷ்- மானசரோவா் யாத்திரை இந்த ஆண்டு மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நாங்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். பொதுமக்களுக்கு இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்’ என்றாா்.

கிழக்கு லடாக் மோதல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் கைலாஷ்- மானசரோவா் யாத்திரை நடைபெறவில்லை.

============

பெட்டி...

இந்தியாவில் ஐபிசிஏ தலைமையகம்!

பெரிய பூனை இனங்களுக்கான சா்வதேச கூட்டமைப்பின் (ஐபிசிஏ) தலைமையகத்தை இந்தியாவில் அமைப்பதற்காக ஒப்பந்தம் கையொப்பமாக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இந்தியாவின் ‘புலி திட்டத்தின்’ 50-ஆவது ஆண்டு விழாவின்போது கடந்த 2023, ஏப்ரலில் பிரதமா் நரேந்திர மோடியால் முன்மொழியப்பட்ட இக்கூட்டமைப்பு, நடப்பு ஆண்டில் ஓா் ஒப்பந்த அடிப்படையிலான அரசுகளுக்கிடையேயான அமைப்பாக மாறியது.

அந்தவகையில், இக்கூட்டமைப்பின் தலைமையகத்தை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்பந்தமானது கூட்டமைப்பின் இயக்குநா் எஸ்.பி. யாதவ் மற்றும் வெளியுறவு அமைச்சகச் செயலா் (கிழக்கு) பி. குமரன் இடையே தில்லியில் கையொப்பமாகியுள்ளது.

யேமன் தலைநகரில் அமெரிக்கா தாக்குதல்: 3 பேர் பலி

யேமனில் ஹெளதி படைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான சனாவில் செளதி படைகளின் மீது குறிவைத்து தொடர்ச்சியாக 21 ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது. இதில் ஹோடிடா, மரிப... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித... மேலும் பார்க்க

ஈஸ்டரையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாகச் சந்தித்தார். வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!

அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதாரம், வா்த்தகம், பிராந்திய அரசியல் வ... மேலும் பார்க்க

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் ரஷியா தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்பும் ரஷியா தாக்குதல்களை நிகழ்த்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். 3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் ச... மேலும் பார்க்க

போரிட்டால்தான் அச்சுறுத்தல் இருக்காது: இஸ்ரேல் பிரதமர்

காஸாவில் போரிடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனிடையே, தங்களு... மேலும் பார்க்க