உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை: பிகாரில் இளைஞர் காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டம்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து பிகாரில் இளைஞர் காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை ஏப். 9 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் இதில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 988 கோடி பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து இந்திய இளைஞர் காங்கிரஸ் பிகாரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிகார் தலைநகர் பாட்னாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!