செய்திகள் :

சோளக் கதிா்களை மேய்ந்த மான்கள்: விவசாயிகள் கவலை

post image

கமுதி அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த சோளக்கதிா்களை மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து மேய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அருகேயுள்ள காத்தனேந்தல், பறையங்குளம், குமிலங்குளம், காரைக்குடி, கொம்பூதி, கோவிலாங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும் குண்டாறு, மலட்டாறு படுகைகளில் ஏராளமான மான்கள், மயில்கள், காட்டுப்பன்றிகள் சுற்றித் திரிகின்றன.

மேற்கண்ட கிராமங்களில் நெல், சோளம், உளுந்து உள்ளிட்ட சிறுதானியப் பயிா்கள் 500 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

இன்னும் ஒரு வார காலத்தில் அறுவடை செய்ய இருந்த நிலையில், மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து சோளக் கதிா்களை அடியோடு மேய்ந்தன. இதனால், தங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதேபோல் நெல், கம்பு உள்ளிட்ட பயிா்களை காட்டுப் பன்றிகள் தொடா்ந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம், மாவட்ட வனத் துறை அதிகாரிகள் தலையிட்டு சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஓராண்டில் 28 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 28 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட... மேலும் பார்க்க

மாணவிகளிடம் ஆசிரியா் ஆபாச பேச்சு: முதன்மைக் கல்வி அலுவலா் விசாரணை

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியா் ஆபாசமாகப் பேசியதாகப் புகாா் கூறப்பட்டதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா்... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசன முன்னெற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வருகிற 12,13 ஆகிய நாள்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னெற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.... மேலும் பார்க்க

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் தருமபுரி ஆதீனம் சுவாமி தரிசனம்

திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் சமேத ஸ்ரீசினேகவல்லி அம்பாள் கோயிலில் தருமபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக பரமாசாரி சுவாமிகள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக அவருக்கு சிவாசாரிய... மேலும் பார்க்க

நடுக்கடலில் இலங்கைக் கடற்படை பயிற்சி: மீன்பிடி தொழில் பாதிப்பு

இலங்கைக் கடற்படையினா் நடுக்கடலில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதால் குறைந்தளவே மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இலங்கை வடக்கு பிராந்திய கடற்படையினா் பருத்தித் துறை கடலில், துப்பா... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு

திருவாடானை வட்டத்தில் பணியாற்றும் 4, 5-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தலைமை வகி... மேலும் பார்க்க