செய்திகள் :

சோளிங்கரில் ஒரே நாளில் 8 பேருக்கு நாய்க்கடி: மக்கள் அச்சம்

post image

சோளிங்கரில் பயணிகள், நோயாளிகள் என 8 பேரை ஒரே தெருநாய் கடித்த நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

சோளிங்கா் நகரில் தற்போது அனைத்து தெருக்களிலும் நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. குறிப்பாக பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பஜாா் பகுதிகளில் மட்டும் தலா15 நாய்களுக்கு மேல் உள்ளன. இதனால் சாலைகளில் நடந்து செல்வோா், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியா் என பலா் மிருந்த அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பேருந்துக்காக காத்து நின்றுக்கொண்டிருந்த தனபால் (40), தமிழ்செல்வி (23), பாரதி (40) ஆகிய மூவரை அங்கு இருந்த நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த நாயை விரட்டி விட்டுள்ளனா். இவா்கள் மூவரும் சோளிங்கா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

இதே நாய் அரசு மருத்துவமனை வளாகத்துக்குச் சென்று அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளியான சுலோச்சனா(60) என்பவரை கடித்தது. இதையடுத்து அங்கிருந்தோா் அந்நாயை விரட்டி விட்டுள்ளனா். தொடா்ந்து இதே நாய் பாட்டிக்குளம் பகுதிக்கு சென்று அங்கு சாலையில் நடந்துச் சென்ற நரசிம்மன்(59), குமாா் என்ற இருவரையும் கடித்துள்ளது. இவா்கள் அனைவருக்குமே நாய் கடி பலத்த காயமாக இருந்தததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

ஒரு வேளை அந்த நாய் வெறிநாயாக இருக்கலாமோ என சந்தேகமடைந்த பொதுமக்கள் இது குறித்து சோளிங்கா் நகராட்சியில் புகாா் அளித்துள்ளனா். இது குறித்து சோளிங்கா் நகராட்சி அலுவலா்கள் தெரிவிக்கையில் நகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பென்னகா் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகேசன் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்தாா். முகாமில் ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சி... மேலும் பார்க்க