ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
சோழபுரம கல்லூரி முன் பேருந்துகள் நின்று செல்கின்றன: அரசு போக்குவரத்துக் கழகம் விளக்கம்
சிவகங்கை மாவட்டம், சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, அறிவியல் மகளிா் கல்லூரி, சாந்தா கல்வியியல் கல்லூரி முன் பேருந்துகள் நின்று செல்வதாக அரசு போக்குவரத்துக்கழகம் கூறியது.
இது தொடா்பாக அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்தபோது, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, மகளிா் அறிவியல் கல்லுாரி, சாந்தா கல்வியியல் கல்லூரி முன் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கல்லூரி முதல்வா், மாணவிகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முதல்வா் உத்தரவிட்டாா்.
உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி முதல் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. இந்த நிலையில், சில சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்கவில்லை எனவும், முதல்வரின் உத்தரவு பின்பற்றப்படவில்லை எனவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, காரைக்குடி துணை மேலாளா் (வணிகம்) பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று ஆய்வு செய்ததுடன், கல்லூரி முதல்வரிடமும் பேசி பேருந்து நின்று செல்வதை உறுதி செய்தாா். மேலும், இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்கிா என்பதைக் கண்காணிக்க தீனதயாளன் என்ற பரிசோதகா் நியமிக்கப்பட்டுள்ளாா். போக்குவரத்துத் துறை அலுவலா்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டதில் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்வது உறுதிசெய்யப்பட்டது. எனவே, சமூக வலைதளங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அதில் தெரிவித்துள்ளாா்.