செய்திகள் :

ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு!

post image

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார்.

நாட்டில் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

மத்திய அரசு கொண்டுவந்த இந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனினும் வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது,

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகு இன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. நமது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி. அனைத்து சமூகங்களுக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீதியை நோக்கி நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.

மத்திய அரசு வழக்குரைஞர் சட்டத்தின் விதிகள் மற்றும் நோக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் விரிவாக முன்வைத்தார். அதன்படி ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது.

எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும்போது அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் உச்ச நீதிமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நான் திருப்தி அடைகிறேன்.

திருத்தப்பட்ட சட்டம் ஏழை முஸ்லிம்களுக்கு, குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். "இது நீண்ட காலமாகக் கவலையாக இருக்கும் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவரும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விதிகளையும் அரசு ஆராயும், முஸ்லிம்களைப் பின்பற்றுவதில் உள்ள பிரச்னையை நாங்கள் ஆராய்வோம், விதிகளைப் பரிசீலிப்போம் என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 2, 3-ஆம் தேதிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் (திருத்த) சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றது, அதன்பிறகு அது சட்டமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Union Minister Kiren Rijiju welcomed the Supreme Court's order on the Waqf Act brought by the Central Government.

இதையும் படிக்க:பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!

பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!

மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு மர்ம நபர்களால் நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மணிப்பூரில் குகி - மைதேயி இனக்குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு முதல்முறை... மேலும் பார்க்க

ஷீஷ் மஹால் வெள்ளை யானையைப் போன்றது.. முதல்வர் ரேகா குப்தா!

ஷீஷ் மஹால் பங்களா வெள்ளை யானையைப் போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ரேகா குப்தா கூறினார். 2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் ஆந்திரத்தில் இறால் ஏற்றுமதி பாதிப்பு: ரூ.25,000 கோடி இழப்பு!

அமெரிக்க வரி விதிப்பால் ஆந்திரத்தில் இறால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூ. 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ... மேலும் பார்க்க

பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

கூகுளின் ஜெமினி ஏஐ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. 'சாரி ட்ரெண்ட்' எனும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என செய்யறிவு தொழில்நுட்பத்தின் ... மேலும் பார்க்க

சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்கும் வகையில், மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களில் சிசிடிவி க... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஹைதராபாத்தில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று(திங்கள்) காலை ... மேலும் பார்க்க