ஜப்பான் - பல்கலை.யில் சுத்தியல் தாக்குதல்: மாணவி கைது
ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்குதல் நடத்திய தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டாா்.
22 வயதான அவா் இலக்கில்லாமல் சுத்தியலைச் சுழற்றி நடத்திய தாக்குதலில் அவரின் வகுப்பறையில் இருந்த எட்டு மாணவா்கள் காயடைந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கசப்பான வரலாறு காரணமாக ஜப்பானில் கொரியா்களிடம் இன்னமும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், கசப்பான அனுபவம் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் இந்த மாணவி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.