ஜம்பேரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடா் மழையால் துறையா் அருகே வைரிச்செட்டிப்பாளையத்திலுள்ள ஜம்பேரி சனிக்கிழமை நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
துறையூா் அருகே உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிச்செட்டிபாளையம் கிராமத்தில் சுமாா் 480 ஏக்கரில் உள்ள ஜம்பேரிக்கு கொல்லிமலையில் பெய்யும் மழை நீா் புளியஞ்சோலை ஓடை வழியாகச் செல்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் ஜம்பேரி நிரம்பி வழிகிறது. இதனால் ஜம்பேரி நீா் பாசனதாரா்கள் உள்பட உப்பிலியபுரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.