திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
`ஜான்சி ராணி, நேதாஜி, சாவர்கர்' புதிய அவதாரத்தில் மீண்டும் சக்திமான் - முகேஷ் கண்ணா அறிவிப்பு!
சக்திமான்... 90-களில் பிறந்தவர்களுக்கு மறக்கமுடியாத தொடர்களில் ஒன்று. சக்திமான கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருப்பார். அந்தத் தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``சக்திமான் தொடர் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. சக்திமான் கதாபாத்திரம் அணிந்திருந்த ஆடையை எப்போதும் நான் என்னுடனே வைத்திருக்கிறேன். இந்த தொடரில் நடிக்கும்போதுதான் கேமராவை மறந்து உற்சாகமாக நடித்தேன். இந்தத் தொடர் மீண்டும் வேண்டும் எனப் பலரும் கேட்டுவந்தார்கள். மற்றவர்களைவிட இந்தத் தொடரில் மீண்டும் சக்திமானாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசையும் கூட. அதில் எனக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படுகிறது. 1997- 2005 வரை சக்திமானாக நடித்திருக்கிறேன்.
இப்போது 2027-ல் இளைய தலைமுறையினருக்கும் சக்திமான் தொடர் சென்று சேரவேண்டும் என நினைக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் இளைய தலைமுறையினர், எதைப் பற்றியும் அக்கறையின்றி கண்போன போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நிதானப்படுத்த இந்தத் தொடர் விரைவில் வெளியாகும்" எனக் கூறியிருக்கிறார்.
மேலும், அந்தத் தொடர் குறித்து ஒரு அறிமுக வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அதில், சக்திமான் உடை அணிந்து, சுதந்திரப் போராட்ட வீரர்கள் என அடையாளமிட்டு ஜான்சி ராணி, சுபாஷ் சந்திரபோஸ், வீர் சாவர்கர் உள்ளிட்ட சிலரின் படங்களை வரைந்திருக்கிறார். சிறுவர்களிடம் அது தொடர்பான கேள்விகளைக் கேட்டு பதில் சொல்வது போன்ற ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்.