ஜார்க்கண்ட்: காங்கிரஸ் தொண்டர் சுட்டுக் கொலை!
ஜார்க்கண்டில் காங்கிரஸ் தொண்டரை இருவர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் சமீபத்தில் திருமணம் செய்த காங்கிரஸைச் சேர்ந்த அலோக் குமார் (28) என்பவர், புதன்கிழமையில் (டிச. 18) வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அவரை இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். நான்கு குண்டுகளால் காயமடைந்த நிலையில், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குமாரை துப்பாக்கியால் சுட்ட இருவரில் ஒருவர், அவரது அண்டை வீட்டார் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவருக்கும் முந்தைய பகைமை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குமாரை கொலை செய்தவர்களைக் கைது செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கட்சித் தொண்டரைத் தாக்கியதாகக் கூறி, அலோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.