செய்திகள் :

ஜிஎஸ்டி எதிரொலி: பால் உள்ளிட்ட பொருட்களின் விலையை குறைத்த அமுல் நிர்வாகம்!

post image

புதுதில்லி: நாட்டின் மிகவும் பிரபலமான பால் பிராண்டுகளில் ஒன்றான 'அமுல்' பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நெய், வெண்ணெய் ஐஸ்கிரீம், பேக்கரி மற்றும் உறைந்த சிற்றுண்டிகள் உள்பட 700க்கும் மேற்பட்ட பொருட்களின் சில்லறை விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதே வேளையில் முழு ஜிஎஸ்டி குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளது.

புதிய விலை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்ற நிலையில், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தனது அறிக்கையில், 700க்கும் மேற்பட்ட தயாரிப்பு பொருட்களின் விலைப் பட்டியலில் திருத்தம் செய்துள்ளது.

இந்தத் திருத்தம் வெண்ணெய், நெய், யு.எச்.டி. பால், ஐஸ்கிரீம், சீஸ், பனீர், சாக்லேட்டுகள், பேக்கரி வகைகள், உறைந்த பால் மற்றும் உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள், வேர்க்கடலை ஸ்ப்ரெட், மால்ட் சார்ந்த பானம் ஆகிய தயாரிப்பு வகைகளில் இதில் அடங்கும் என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெண்ணெய் (100 கிராம்) விலை ரூ.62ல் இருந்து ரூ.58 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நெய் விலை லிட்டருக்கு ரூ.40 குறைந்து ரூ.610 ஆக உள்ளது.

அமுல் சீஸ் (1 கிலோ) அதிகபட்ச சில்லறை விற்பனை விலையானது கிலோ ஒன்றுக்கு ரூ.30 குறைக்கப்பட்டு இனி ரூ.545 ஆக உள்ளது.

உறைந்த பனீர் (200 கிராம்) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை செப்டம்பர் 22 முதல் ரூ.95 ஆக இருக்கும். தற்போது அது ரூ.99 ஆக உள்ளது.

36 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் விலைக் குறைப்பானது, அதன் பால் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும் வேளையில், அதன் வருவாய் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றது.

இதையும் படிக்க: மும்பையில் ரூ.500 கோடிக்கு நிலம் வாங்கிய எஸ்.டி.டி குளோபல் டேட்டா நிறுவனம்!

மும்பையில் ரூ.500 கோடிக்கு நிலம் வாங்கிய எஸ்.டி.டி குளோபல் டேட்டா நிறுவனம்!

புது தில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான லோதா டெவலப்பர்ஸ், மும்பையில் 24 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.டி.டி குளோபல் டேட்டா சென்டர்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.500 கோடிக்கு விற்றுள்ளது.சிங்கப்பூ... மேலும் பார்க்க

இன்றும் தங்கம் விலை உயர்ந்ததா? விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் வார இறுதி நாளான சனிக்கிழமை காலை, ஆபரணத் தங்கம் விலை உயர்வுடன் வணிகமாகி வருகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை, சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.82,320-க்கு விற்பனையா... மேலும் பார்க்க

வோடபோன் ஐடியா பங்குகள் 7% உயர்வு!

புதுதில்லி: நிறுவனத்தின் 2016-17 வரையிலான காலத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கையை ரத்து செய்யக் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மனுவை செப்டம்பர் 26 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன... மேலும் பார்க்க

பிளிப்கார்ட்டில் விற்பணைக்கு வரும் ராயல் என்ஃபீல்ட்!

புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து அதன் 350 சிசி போர்ட்ஃபோலியோவை விற்பனை செய்ய உள்ளதாக இன்று தெரிவித்தது. புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, க... மேலும் பார்க்க

சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.07% ஆக உயர்வு!

புதுதில்லி: விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் முறையே 0.77 மற்றும் 1.01 சதவிகிதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 1.07 மற்றும் 1.26 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தொழிலாள... மேலும் பார்க்க