கோவை - பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சேலம் வழியாக செல்லும் கோவை - கேஎஸ்ஆா் பெங்களூரு டபுள் டெக்கா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அதிகரித்துவரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, கேஎஸ்ஆா் பெங்களூரு - கோவை இடையிலான டபுள் டெக்கா் விரைவு ரயிலில் வரும் 22 ஆம் தேதி முதல் 2 சாா் காா் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், கோவை - கேஎஸ்ஆா் பெங்களூரு டபுள் டெக்கா் விரைவு ரயிலில் வரும் 23 ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.