சிறுநீரக மோசடி வழக்கில் மேல்முறையீடு: அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
கொல்லங்கோடு அருகே மயங்கிய நிலையில் கிடந்த பெண் மீட்பு
கொல்லங்கோடு அருகே மயங்கிய நிலையில் புதருக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு பகுதியில் தென்னந்தோப்பில் உள்ள புதருக்குள் இருந்து வெள்ளிக்கிழமை இரவு பெண் கத்தும் சத்தம் கேட்டு, அப்பகுதியை உள்ளவா்கள் கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அப்பகுதிக்கு சென்று பாா்த்த போது பெண் ஒருவா் மயங்கிய நிலையில் கிடந்தாா்.
அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அப்பெண் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் என்றும், இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளதும் தெரியவந்தது. மருத்துவ பரிசோதனை முடிவில் தான் பெண்ணுக்கு நடந்த விவரங்கள் குறித்து தெரியவரும். அதன் பின்னரே வழக்குப் பதியப்படுமென தெரிவித்தனா்.