பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!
மாமூட்டுக் கடை - காட்டாவிளை சாலையை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் அருகே உள்ள மாமூட்டுக் கடை- காட்டா விளை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலம், கொல்லஞ்சி எல்லைப் பகுதியில் மாமூட்டுக் கடை - காட்டா விளை சாலை உள்ளது. இச்சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.
குறிப்பாக, காட்டா விளை பகுதி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.