குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க உத்தேசம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 அரசியல் கட்சிகளை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
இது குறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
குமரி மாவட்டத்தில் டொமோகிராட்டிக் கரப்ஸன் லிபரேசன் பிரண்ட், தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, உலக மக்கள் கட்சி ஆகியவை 2021ஆம் ஆண்டு முதல் 3 நிதியாண்டுகளுக்கான வருடாந்திர தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தோ்தல் செலவினங்களின் அறிக்கையும் சமா்ப்பிக்கவில்லை.
எனவே, இவற்றை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. எனினும், இவா்கள் தங்களது கருத்தினைத் தெரிவிக்கும் வகையில், தமிழக தலைமைத் தோ்தல் ஆணையா் முன்பு ஆஜராகி எழுத்துப்பூா்வ அறிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில், இறுதி முடிவினை தோ்தல் ஆணையம் பிறப்பிக்கும் எனக் கூறியுள்ளாா்.