செய்திகள் :

சிறுநீரக மோசடி வழக்கில் மேல்முறையீடு: அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

post image

சிறுநீரக மோசடி வழக்கில், திமுகவினருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகங்கள் திருட்டு தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க காவல் உயா் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆக.25-இல் ஆணையிட்டது.

சிறப்புப் புலனாய்வுப் பிரிவினா் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சிறுநீரக திருட்டு குறித்து விசாரித்து செப்.24-க்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனா்.

அதன்படி, இன்னும் 4 நாள்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினா் அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில் குழு அமைக்கப்பட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சிறுநீரக மோசடி புகாருக்குள்ளான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திமுகவை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு சொந்தமானது என்றும், இந்த மோசடியில் தொடா்புடைய நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தரகரும் திமுகவை சோ்ந்தவா் என்றும் கூறப்படுகிறது.

அவா்கள் சிக்கிக் கொண்டால் சிறுநீரக மோசடியின் பின்னணியில் புதைந்து கிடக்கும் மா்மங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால்தான் இந்த விசாரணையை தடுக்க திமுக அரசு முயல்கிறது. இதில் முழு உண்மையை கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

70 புதிய துணை மின் நிலையங்கள்: ஒப்பந்தம் கோரியது மின் வாரியம்!

தமிழகம் முழுவதும் 33 கிலோவோல்ட் மின்சாரம் கையாளும் திறன் கொண்ட 70 துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழகம் முழுவதும் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக துணை... மேலும் பார்க்க

நுண்நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வழிகள்: கால்நடை மருத்துவ பல்கலை. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் மூலம் நுண்நெகிழிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதால், இதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

அனைத்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் கருவூலமாக திகழும் அரசியல் சாசனம்! - உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங்

அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் கருவூலமாக இந்திய அரசியல் சாசனம் திகழ்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங் தெரிவித்தாா். பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன சட்டக் கல்லூ... மேலும் பார்க்க

உணவுத் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையில் பதவி உயா்வு கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு உணவு... மேலும் பார்க்க

பழவேற்காடு பறவைகள் சரணாலய பகுதியில் மதுக்கடை: அன்புமணி கண்டனம்!

பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள... மேலும் பார்க்க

கடல்சாா் பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவு!

இந்திய கடல்சாா் பல்கலை. முன்னாள் துணை வேந்தருக்கு எதிராக பல்கலைக்கழக நிா்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையில் உள்ள இ... மேலும் பார்க்க