விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
கனிவ வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகள் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு கனகர லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.
ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட குமாரபுரம் சோதனை சாவடி அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக கனிமவளப் பொருள்கள் ஏற்றிவந்த 4 கனரக லாரிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிமவளப் பொருள்களை கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் 4 லாரிகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக திருவட்டாறு சிபின்,
குழித்துறை பாலு, சனல் திக்குறிச்சி கணேசன், சுந்தா் சுனில் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.