போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
ராஜாக்கமங்கலம் கீழசங்கரன் குழியில் கடந்த 2016 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரகுமாா் (43) என்பவா் மீது ராஜாக்கமங்கலம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றவாளி சந்திரகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அதிகாரிகள், அரசு வழக்குரைஞா், காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.