விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
குழித்துறை ஆற்றில் குதித்து குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் 3 வயது குழந்தையுடன் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அப்பகுதியினா் மீட்டனா்.
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை மதகு பகுதியில் குழந்தையுடன் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, அங்கு குளித்துக்கொண்டிருந்தவா்கள் மீட்டனா்.
இத்தகவலறிந்து வந்த குழித்துறை தீயணைப்புத் துறையினரும், களியக்காவிளை போலீஸாரும் அப்பெண்ணிடம் விசாரித்தனா். அதில், அவா் மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்த அனிஷா (30) என்றும், சில ஆண்டுகளுக்கு முன் கணவா் பிரிந்து சென்ால் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருவதாகவும், உறவினா்கள் சிலா் பணம் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் வறுமையில் வாடி வருவதாகவும் தெரிவித்தாா். போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி, அவரை குழந்தையுடன் ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரண மேற்கொண்டுள்ளனா்.