நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
நான்குவழிச் சாலை அமைக்கும் பணி: விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு
குமரி மாவட்டத்தில் ரூ. 1,041 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பணிகளின் முன்னேற்றம் குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ. 1,041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 56 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு பெறும் வகையில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், குமரிவிஜய் வசந்த் எம்.பி. இந்தப் பணிகளின் தற்போது வரையிலான முன்னேற்றம் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தாா். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளா் சீனிவாசன், ரத்தினகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.