இதை செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!
ஜியோமி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...
ஜியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஜியோமி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஜியோமி, இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக உள்ளது. நூற்றுக்கணக்கான மாடல் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றது.
இந்த நிலையில், ஜியோமி இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 25 முதல் 30 ஆம் தேதி வரை பராமரிப்பு மற்றும் இணைப்பு சேவை வாரமாக (கேர் அண்ட் கனெக்ட்) கொண்டாடி வருகின்றது.
இதனை முன்னிட்டு தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜியோமி மற்றும் ரெட்மி மாடல் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பிரச்னைகளால் அவதிப்படும் வாடிக்கையாளர்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் புதிய பேட்டரிகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
மேலும், பேட்டரி மாற்றப்படும் ஸ்மார்ட்போன்களின் சாஃப்ட்வேர் இலவசமாக அப்டேட் செய்யப்பட்டு, போனின் ஹெல்த் செக் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை பெற அருகாமையில் இருக்கும் ஜியோமி சேவை மையங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
