சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!
ஜீனி வெளியீடு எப்போது?
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி பிரதர் படத்தின் தோல்வியிலிருந்து மீள காதலிக்க நேரமில்லை படத்திற்காகக் காத்திருக்கிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தயாரான இப்படத்தின் முதல் பாடலான ’என்னை இழுக்குதடி’ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் பணிகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஜெயம் ரவி ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: சில்க் ஸ்மிதா படத்தின் அறிவிப்பு விடியோ!
வேல்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'ஜீனி' திரைப்படம், திரையரங்க உரிமைகளை தவிர்த்து ஏற்கனவே ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தை அடுத்தாண்டு (2025) மார்ச் மாதம் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.