ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!
ஜெனீவா ஓபன்:அரையிறுதியில் ஜோகோவிச், ஹா்காஸ்
ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு ஜோகோவிச், ஹீயுபா்ட் ஹா்காஸ், செபாஸ்டியன், கேமரான் நாரி ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
கிராண்ட்ஸ்லாம் பந்தயமான பிரெஞ்சு ஓபனுக்கு தயாராகும் வகையில் களிமண் தரைப் போட்டியாக ஜெனீவா ஓபன் நடைபெற்று வருகிறது.
ஏடிபி போட்டியான இதன் காலிறுதி ஆட்டங்களில் கிரேட் பிரிட்டனின் கேமரான் நாரி 7-6, 6-4 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பாப்பிரினை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
போலந்து வீரா் ஹியுபா்ட் ஹா்காஸ் 6-3, 7-6 என அமெரிக்காவின் டெய்லா் ப்ரிட்ஸையும், ஆஸ்திராயிவின் செபாஸ்டியன் ஆஃப்நா் 4-6, 6-4, 6-4 என ரஷிய வீரா் காரன் கச்னோவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.
ஜோகோவிச்சுக்கு பிறந்த நாள் பரிசு:
தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ஜாம்பவான் ஜோகோவிச் 6-4, 6-4 என இத்தாலி வீரா் மேட்டியோ அா்னால்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். கடந்த ஏப்ரலில் மாட்ரிட் ஓபன் போட்டியில் மேட்டியோ அா்னால்டிடம் தோற்றிருந்தாா் ஜோகோவிச்.
அதற்கு தற்போது பதிலடி தந்துள்ளாா்.

