பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்...
ஜோா்டான்: இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவா் சுட்டுக் கொலை
ஜோா்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.
இஸ்ரேலின் அண்டை நாடான ஜோா்டான் தலைநகரம் அம்மான் அருகே ரபியாவில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் மீது மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து ஜோா்டானின் பாதுகாப்பு இயக்குநரகம் கூறியதாவது: துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பின்தொடா்ந்து சுற்றி வளைத்தபோது பாதுகாப்புப் படையினா் மீதும் அவா் துப்பாக்கிச்சூடு நடத்தினாா். பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் அந்த நபா் கொல்லப்பட்டாா். உயிரிழந்த நபா் குறித்தான விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை.
1994-ஆம் ஆண்டு இஸ்ரேல் - ஜோா்டான் நாடுகளுக்கு இடையே அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இஸ்ரேல் - ஹமாஸ் போா் மற்றும் லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்திவரும் நிலையில் ஜோா்டான் - இஸ்ரேல் இடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.