செய்திகள் :

டாடா மோட்டாா்ஸ் சா்வதேச விற்பனை சரிவு

post image

கடந்த மாா்ச் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 3 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜாகுவாா் லேண்ட் ரோவா் உள்ளிட்ட குழும நிறுவனங்களின் உலகளாவிய மொத்த விற்பனை 3,66,177-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவு.

கடந்த மாா்ச் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை 1,46,999-ஆக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு.

கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் ஜாகுவாா் லேண்ட் ரோவரின் உலகளாவிய மொத்த விற்பனை 1 சதவீதம் உயா்ந்து 1,11,413-ஆக உள்ளது. அந்தக் காலாண்டில் 7,070 ஜாகுவாா் வாகனங்கள், 1,04,343 லேண்ட் ரோவா் வாகனங்கள் விற்பனையாகின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில்... மேலும் பார்க்க

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

2,850 கோடி டாலராகக் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சா்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன... மேலும் பார்க்க

நிஸ்ஸான் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகும் ரெனால்ட் தலைவர்!

டோக்கியோ: நிஸ்ஸான் நிறுவனத்தின் சரிவைச் சமாளிக்கும் வகையில், அதன் இயக்குநர்கள் குழுவிலிருந்து ரெனால்ட் தலைவர் ஜீன்-டொமினிக் செனார்ட் விலக உள்ளதாக ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். நிஸ்ஸானி... மேலும் பார்க்க