செய்திகள் :

டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்பு!

post image

புதுதில்லி: அதிக மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு கடந்த வாரம் சுமார் ரூ.1,65,180.04 கோடி இழப்பை சந்தித்தன. இதில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

கடந்த வாரத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2.39 சதவிகிதம் சரிந்தது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கார்ப்பரேட் வருவாயில் தொடர்ச்சியான ஏமாற்றங்கள் ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது என்றார் ரெலிகேர் புரோக்கிங் லிமிடெட் ஆராய்ச்சி - மூத்த துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 67,565 கோடி டாலராக சரிவு

ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது ரூ.46,729.51 கோடி குறைந்து ரூ.12,94,025.23 கோடியாக உள்ள நிலையில் ஸ்டேட் வங்கியின் சந்தை மதிப்பானது ரூ.34,984.51 கோடி குறைந்து ரூ.7,17,584.07 கோடி ஆனது.

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.27,830.91 கோடி குறைந்து ரூ.5,61,329.10 கோடியாகவும், இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.22,057.77 கோடி குறைந்து ரூ.17,15,498.91 கோடியாக உள்ளது.

ஐடிசி-யின் சந்தை மூலதனமயமாக்கல் ரூ.15,449.47 கோடி குறைந்து ரூ.5,82,764.02 கோடியாகவும், பார்தி ஏர்டெல் ரூ.11,215.87 கோடி குறைந்து ரூ.8,82,808.73 கோடியாகவும் உள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மதிப்பீடு ரூ.4,079.62 கோடி குறைந்து ரூ.5,74,499.54 கோடியாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மதிப்பீடு ரூ.2,832.38 கோடி குறைந்து ரூ.8,85,599.68 கோடியாகவும் உள்ளது.

எனினும் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.13,681.37 கோடி ரூபாய் அதிகரித்து ரூ.7,73,962.50 கோடி ரூபாயாகவும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.416.08 கோடி ரூபாய் அதிகரித்து ரூ.15,00,113.36 கோடி ரூபாயாக நிலைபெற்றது.

மிகவும் மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐடிசி, எல்ஐசி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உள்ளன.

சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!

மும்பை: இன்றைய முதல் நாள் வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் குறியீடு சற்று உயர்ந்து தொடங்கிய சற்று நேரத்தில், மீண்டும் சரிந்தது முடிந்தது.அன்னிய முதலீட்டு தொடர்ந்து வெளியேறுவதாலும், ஐடி பங்குகள... மேலும் பார்க்க

559 மெகாவாட் மின்சாரம் வழங்க குஜராத் உர்ஜா விகாஸ் உடன் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் ஒப்பந்தம்!

கொல்கத்தா: குஜராத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் உடன் 559 மெகாவாட் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது தாமோதர் வேல... மேலும் பார்க்க

கடன் வட்டி விகிதங்களை உயா்த்திய எஸ்பிஐ

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன்களுக்கான (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது. இதுகுறித்து வங்கியின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெ... மேலும் பார்க்க

ஹீரோ மோட்டோகாா்ப் நிகர லாபம் உயா்வு

கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் நிகர லாபம் 6 சதவீதம் உயா்ந்துள்ளது. இத... மேலும் பார்க்க

பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16% உயர்வு!

புதுதில்லி: பால் தயாரிப்பு நிறுவனமான, பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் மாதம் காலாண்டில், 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.29.21 கோடி உள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகர லாபம்... மேலும் பார்க்க

முஃபின் கிரீன் நிகர லாபம் உயர்வு!

புதுதில்லி: முஃபின் கிரீன் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் அதிக வருவாய் காரணமாக சுமார் ரூ.6 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.கடந்த 2023-24 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு ஜூலை முதல் செப்டம்பர் காலகட்டத... மேலும் பார்க்க