டெல்லியில் 'யெஸ்' ஆர் 'நோ' பரீட்சை... என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!
மும்பை: அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் குறித்த கவலைகள் மற்றும் வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கைகளுக்கு இடையில், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறவடைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.25 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.88.13 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.88.30 ஐ தொட்ட நிலையில், முடிவில் 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20ஆக முடிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, இந்திய ரூபாய் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகராக 9 காசுகள் உயர்ந்து ரூ.88.26 ஆக இருந்தது.
இதையும் படிக்க: காளையின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!