செய்திகள் :

டிச. 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

post image

வரும் டிச. 3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் கோட்டாறு தூய சவேரியார் ஆலயத் திருவிழாவினையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கு ஈடுசெய்யும் வகையில், டிச. 14 ஆம் தேதி வேலைநாளாக அறிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மணிப்பூருக்கு மேலும் 5,000 ஆயுதப் படை வீரர்கள்! மத்திய அரசு

நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நவ. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த ஆலயத் திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சவேரியாரை தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் நீட்டிப்பு!

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தம... மேலும் பார்க்க

மார்ட்டின் லாட்டரி தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல்!

மார்ட்டின் லாட்டரி நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களில் இருந்து ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமலாக்கத்துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திரு... மேலும் பார்க்க

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு!

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையி... மேலும் பார்க்க

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும்: ராகுல் காந்தி

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள ... மேலும் பார்க்க

9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கல்!

2024-25 ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகையாக ரூ. 90 லட்சத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ... மேலும் பார்க்க

கருவுற்று இருப்பதை அறிவித்த சுந்தரி தொடர் நாயகி!

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லா, தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமை... மேலும் பார்க்க