செய்திகள் :

டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் டெஸ்லா நிர்வாகி எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்து. அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டொனால்ட் டிரம்பை பதவி நீக்க தீர்மானம் கொண்டுவந்து, துணை அதிபரை ஓவல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் 47வது அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்தக் கருத்தை அவர் சுயமாகப் பதிவிடவில்லை. மலேசிய எழுத்தாளர் போட்ட பதிவுக்கு ஆம் என்றுதான் பதிலளித்துள்ளார்.

"அதிபர் vs எலான். யார் வெற்றி பெறுகிறார்கள்? என் பணம் எலானின் மீதுதான். டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவருக்குப் பதிலாக ஜே.டி. வான்ஸ் நியமிக்கப்பட வேண்டும்," என்று மலேசியாவைச் சேர்ந்த வலதுசாரி எழுத்தாளர் இயன் மைல்ஸ் சியோங் வியாழக்கிழமை ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருந்தார். "ஆம்," என்று சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு சியோங்கின் பதிவுக்க எலான் மஸ்க் பதிலளித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபருக்கும் டெஸ்லா உரிமையாளருக்கும் இருந்த நல்லுறவு, வரி விதிப்பு மற்றும் செலவினங்கள் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த மசோதாவால் உடைந்து போனது. இதையடுத்தே பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வரை எலான் மஸ்க்கால் இன்று அதிபருக்கு எதிராகக் கிளப்பப்பட்டது.

நாசா விண்வெளி நிறுவனத்தை வழிநடத்த ஒரு தொழில்நுட்ப நிபுணரின் ஆதரவைப் பெற்ற வேட்பாளருக்கான எனது ஆதரவை வாபஸ் பெற்றது உள்பட, தான் எடுத்த சில முடிவுகளுக்கு எலான் மஸ்க் ஏன் வருத்தப்பட்டார் என்பதைத் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் இன்று(சனிக்கிழமை) நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் ... மேலும் பார்க்க

உக்ரைனில் 200 ட்ரோன்கள், ஏவுகணைகளால் ரஷியா தீவிர தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழித் தாக்குதல் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டுள்ளது.உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவு நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் ... மேலும் பார்க்க

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்ப் உறுதி

சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்தார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாட... மேலும் பார்க்க

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க