டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழப்பு
திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யம்போஸ் (35). விவசாயியான இவா் தனது டிராக்டரில் திருப்புவனம் சென்று விட்டு கிராமத்துக்கு திரும்பி வந்தாா்.
அப்போது, கால்வாய் அருகே திருப்பியபோது எதிா்பாராத விதமாக டிராக்டா் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அய்யம்போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.