குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!
டிரெண்டிங்கில் விடியோ பாடல்: தமன்னா நெகிழ்ச்சி!
நடிகை தமன்னா தனது விடியோ பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் இருப்பதால் மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
ரெய்டு 2 படத்தில் நடிகை தமன்னா நடனத்தில் புதிய பாடல் விடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷ், கார்த்தி, சூர்யா, விஜய், அஜித் என முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
ரஜினியுடன் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடி ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய புரமோஷனாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் ஹிந்தியில் அவரது நடனதுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
ஹிந்தியில் ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இந்தப் பாடல் யூடியூப்பில் மட்டும் 555 மில்லியன் (55.5 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.
தற்போது ஒடேலா 2, ரெய்டு 2 படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில், ராஜ்குமார் குப்தா இயக்கியுள்ள ரெய்டு 2 படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

இந்தப் பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 2ஆவது இடம் பிடித்தது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.