செய்திகள் :

டிவிஎஸ் அப்பாச்சி 20-ஆம் ஆண்டு விழா எடிசன்!

post image

டிவிஎஸ் அப்பாச்சியின் 20-ஆம் ஆண்டு விழா எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அப்பாச்சி பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, அப்பாச்சி பைக்குகளில் கூடுதல் வசதிகளுடன் 20 ஆம் ஆண்டுக்கான அனிவெர்சரி சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது.

விழாவுக்கான சிறப்பு மாடல்களாக RTR 160, RTR 180, RTR 200 4V, Apache RTR310 மற்றும் RR310 போன்ற மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கருப்பு வண்ணத்தில் சாம்பெய்ன் தங்க நிற லைவரி டிசைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில், கூடுதலாக அலாய் வீல்களும் சாம்பெய்ன் தங்க நிறம் மற்றும் கருப்பு நிறங்கள் இணைந்த இரண்டு வண்ணத்தில் ஜொலிக்கின்றன.

அனிவெர்சரி எடிஷன் பைக்குகளின் அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 -ன் ஆரம்ப விலையாக ரூ.1.38 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பாச்சி ஆர்டிஆர் 310 ரூ.3.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய பைக்குகள் நிறத்தில் மட்டுமே மாறுபாடுகளைப் பெற்றுள்ளன. ரேசிங் ரெட், மரைன் ப்ளூ மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ணங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

TVS Launches 20th Anniversary Special Edition Apache Motorcycles

இதையும் படிக்க... விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பங்குச் சந்தை 4-ம் நாளாக இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,108.92 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.15... மேலும் பார்க்க

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

புதுதில்லி: அமெரிக்காவின் உயர் வரிகள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் கிட்டத்தட்ட 8 சதவிகிதத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக மதிப்பீட்டு நிறுவனமான 'இக்ரா' தெரிவித்... மேலும் பார்க்க

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா, சரக்கு மற்றும் சேவை வரி பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா உள்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவடைந்தது. உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கும், அமெரிக்க-இந்திய வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீதான ந... மேலும் பார்க்க

வர்த்தக பேச்சு, ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் இரண்டாவது நாளாக உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

மும்பை: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது அமர்வாக உயர்ந்து முடிவடைந்தன. இதில் ஆட்டோ, பொதுத்துறை வங்கி, ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகளில் காணப்பட்ட கொள்முதல் காரணமாக நிஃப்டி 25,300க்கு மேல... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

பங்குச் சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,506.40 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.50 மணியளவில் சென்... மேலும் பார்க்க