செய்திகள் :

டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகம்!

post image

டென்னிஸ் பந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் டி10 டென்னிஸ் கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா நடைபெற்றது.

இந்தப் போட்டிகள் மே 26ஆம் தேதி முதல் ஜுன் 5ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.

டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் லட்சக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள்: மும்பை மாவேரிக்ஸ், தில்லி டைனமிக்ஸ், பெங்களூரூ பிளாஸ்டர்ஸ், கொல்கத்தா கிங்ஸ், சண்டிகர் சாம்பியன்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், அகமதாபாத் அவேஞ்சர்ஸ், சென்னை சேலஞ்சர்ஸ்.

இதில் 31 லீக் போட்டிகள், 4 பிளே- ஆஃப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

டிபிசிபிஎல் (டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரிமீயர் லீக்) இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளன. நாட்டின் அனைத்து மக்களும் பிரதிநிதித்துவப்படுத்த வடக்கு, தெற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்தத் தொடருக்கான ஏலம் வரும் மே.5,6ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கின்றன. இந்திய அளவில் இதற்கான வீரர்களை 8 அணிகளும் தேர்வு செய்துகொள்ளலாம்.

”டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். தெருவில் விளையாடும் விளையாட்டை தொழில்முறையாக மாற்றும் நோக்கத்துடன் இது தொடங்கப்படுவதாக” டிபிசிபிஎல் தெரிவித்துள்ளது.

இந்தத் தொடரினை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த டிபிசிபிஎல்-க்கு விளம்பர தூதராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸி. அணியில் கேமரூன் கிரீன்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற முழு உடல்தகுதியுடன் இருப்பார் என ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி நம்பிக்கை தெரிவித்து... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்காவும் புறக்கணிக்கிறதா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி வலியுறுத்தியுள்ளார்.ஐசிசி சாம்பி... மேலும் பார்க்க

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

அயர்லாந்துக்கு எதிராக இந்திய மகளிரணியின் ஆதிக்கம் தொடருமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.அயர்லாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில... மேலும் பார்க்க

ஆஸி. ரசிகர்களுக்கு நற்செய்தி: சாம்பியன்ஸ் டிராபியில் ஹேசில்வுட்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பாரென ஆஸி. தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் முழங்கால் காயம் காரணமாக தொடரில... மேலும் பார்க்க

இலங்கை டெஸ்ட் தொடரில் ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரர் யார்? ஜியார்ஜ் பெய்லி பதில்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி பேசியுள்ளார்.இந்... மேலும் பார்க்க

எஸ்ஏ20 விளையாடுவதால் ஆப்கன் கிரிக்கெட் பலனடைகிறது: ரஷித் கான்

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடுவதால் ஆப்கன் கிரிக்கெட் வளர்ச்சியடைகிறது என ரஷித் கான் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் (எஸ்ஏ20) ஜன.9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மும்பை கேப்... மேலும் பார்க்க