செய்திகள் :

டொவினோ தாமஸைப் பாராட்டியதால் தன் மேலாளரைத் தாக்கிய உன்னி முகுந்தன்!

post image

நடிகர் உன்னி முகுந்தன் தன்னைத் தாக்கியதாக அவரின் மேலாளர் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றவர் உன்னி முகுந்தன். 'மாளிக்கப் புரம்' படத்தின் மூலம் பெரிதாகக் கவனம் ஈர்த்தவர் மார்கோ படத்தால் இந்தியளவில் பிரபலமானார்.

உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடலைப் பராமரிக்கும் நாயகனான உன்னி முகுந்தன் புகைப்பழக்கத்திற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டோவினோ தாமஸின் நரிவேட்டை திரைப்படத்தை உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் குமார் இணையத்தில் பாராட்டி எழுதியுள்ளார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த உன்னி முகுந்தன் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய விபின் குமார், “நான் நடிகர் உன்னி முகுந்தனிடம் 6 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வருகிறேன். மார்கோ திரைப்படத்துக்குப் பின் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அவரை வைத்து கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களும் பின்வாங்கியதால் உன்னி கடுமையான விரக்தியில் இருந்தார். யார் சொல்வதையும் கேட்கும் நிலையிலும் இல்லை.

நான் 18 ஆண்டுகளாகத் திரைத்துறையில் திரைப்பட புரமோஷன் ஆலோசகராகவும் இருக்கிறேன். பல படங்களுக்கு மக்கள் தொடர்பு பணிகளையும் செய்திருக்கிறேன். அப்படி, புரமோஷனுக்காக டோவினோ தாமஸின் நரிவேட்டை படத்த்தைப் பாராட்டி முகநூலில் குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்த உன்னி முகுந்தன், என்னை அழைத்து இனிமேல் நீ எனக்கு மேலாளராக இருக்க வேண்டாம் என்றார்.

மேலும், என்னை நேரில் அழைத்துத் தாக்கியதுடம் கடுமையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டினார். அதற்காகவே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

மலையாளத்தின் முன்னணி நடிகர் ஒருவர் தன் மேலாளரைத் தாக்கிய சம்பவம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: துடரும் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

2 கோல்கள், 2 அசிஸ்ட்ஸ்: இன்டர் மியாமிக்காக மெஸ்ஸி புதிய சாதனை!

இன்டர் மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அந்த் அணிக்காக குறைவான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்க... மேலும் பார்க்க

குபேரா விழாவிற்கு ஜோடியாக வந்த தனுஷ் - ஐஸ்வர்யா! இணைந்து வாழ முடிவு?

குபேரா இசைவெளியீட்டு விழாவில் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இணைந்து பங்கேற்றுள்ளனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி க... மேலும் பார்க்க

ஆண்கள் நடிகைகளைச் சுலபமாகத் தொடுகின்றனர்: நித்யா மெனன்

நடிகை நித்யா மெனன் நடிகைகளிடம் ஆண்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டித்துள்ளார். நடிகை நித்யா மெனன் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் ... மேலும் பார்க்க

பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?

உலக குத்துச்சண்டையின் புதிய அமைப்பு போட்டியாளர்களுக்கு பாலினம் கண்டறியும் பிசிஆர் எனும் புதிய சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது. 18 வயதைக் கடந்த அனைத்து போட்டியாளர்களும் இந்தப் பரிசோதனையை செய்தபிறகே போட்... மேலும் பார்க்க

ஸ்குவிட் கேம் - 3 டிரைலர்!

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது சீசனின் டிரைலர் வெளியாகியுள்ளது.பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம... மேலும் பார்க்க

இதை மணிரத்னம் பார்க்க வேண்டும்!

இயக்குநர் மணிரத்னம் படங்களின் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட விடியோ கவனம் பெற்று வருகிறது. 1983-ல் பல்லவி அனு பல்லவி திரைப்படம் மூலம் இயக்குநராக திரைத்துறைக்கு அறிமுகமான மணிரத்னம் நாயகன், மௌனராகம்,... மேலும் பார்க்க