செய்திகள் :

தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

post image

கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இசைவெளியீட்டு விழா மே.16ஆம் தேதி நடக்கவிருந்தது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மே.16ஆம் தேதி நடைபெறவிருந்தது. அது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. இந்த விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த நேரத்தில் நாம் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் ஒற்றுமையை தெரிவிக்க வேண்டும். இது குடிமகனாக நமது கடமையாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் படம் ஜூன்.5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

ஷெல் தாக்குதலால் வீடுகள் சேதம் - புகைப்படங்கள்

ஜம்முவில் ட்ரோன் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்யும் பாதுகாப்புப் படையினர்.தாக்குதலால் சேதமடைந்த வாகனங்களுக்கு அருகில் நிற்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள்.பாகிஸ்... மேலும் பார்க்க

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்!

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததா... மேலும் பார்க்க

பிரபல தமிழ் நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் மோகன்லால்?

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்க நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்த... மேலும் பார்க்க