செய்திகள் :

தங்கக் காசுகள் திருட்டு: பெண் கைது

post image

ராஜபாளையத்தில் தங்கக் காசுகள், பணத்தை திருடியதாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் சுதா்சன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (69). கட்டட ஒப்பந்ததாரா். இவரது வீட்டில் இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மனைவி லட்சுமி (32) கடந்த 6 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் திடீரென வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நாள் கழித்து சிவசங்கா் தனது பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த தலா 2 கிராம் எடை கொண்ட 25 தங்கக் காசுகள், பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் வழக்குப்பதிந்து லட்சுமியை பிடித்து விசாரித்ததில் இவற்றை அவா் திருடியது தெரியவந்தது. மேலும் அவா் தங்கக் காசுகளை உருக்கி, கட்டியாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த 50 கிராம் தங்கம், ரூ. 35 ஆயிரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து லட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சு... மேலும் பார்க்க

கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள், விளம்பர பதாக... மேலும் பார்க்க

பால் வியாபாரி அடித்துக் கொலை: மனைவி, மகள் உள்பட மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பால் வியாபாரியை அடித்துக் கொலை செய்த மனைவி, மகள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (62). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசி பெரியகுளம் ... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி ரிசா்வ் லயன் மருதுபாண்டியா்... மேலும் பார்க்க

கல்குவாரி நீரில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பிரதீப்குமாா் (25). இவா் புதன்கிழமை திருத்தங்கல்-செங... மேலும் பார்க்க