தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்க விருப்பம் காட்டும் விநாயகர் சதுர்த்தி, ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் நகையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 75,240 -க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 9,405 -க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மூன்றாவது நாளாக எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 130 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,30,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 800 குறைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 400, புதன்கிழமை கிராமுக்கு ரூ. 280 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.