முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் த...
தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 15) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.58,520-க்கு விற்பனையான நிலையில், வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கும் விற்பனையானது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 58,640-க்கும் விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 58,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயர்ந்து ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.