தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
4 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை திங்கள்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ. 7,405க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 440 குறைந்து ஒரு சவரன் ரூ. 59,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.