செய்திகள் :

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 400 குறைந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு மேலும் ரூ.160 குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிரடி ஏற்றத்தைக் கண்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டு ஒரு பவுன் தங்கம் ரூ. 64,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, அடுத்தடுத்து இரு நாள்களில் ரூ. 520 குறைந்து வியாழக்கிழமை காலை ஒரு பவுன் ரூ. 64,080-க்கு விற்பனையானது.

இதையும் படிக்க :வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

வெள்ளிக்கிழமை அதிரடியாக ரூ. 400 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 63,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 7,960-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு மேலும் ரூ.160 குறைந்து ரூ. 63,520-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 7,940-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடர்ந்து 2-ஆவது நாளாக எவ்வித மாற்றமின்றி கிராம் ரூ. 108-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலை 2-ஆவது நாளாக குறைந்துள்ளது. கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ. 106.90-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,04,9000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!

மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழ... மேலும் பார்க்க

பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவரை காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர். பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திலுள்ள காகார் பாலத்தின் அருகில் கோல்டி ப... மேலும் பார்க்க

ஹிமாசல்: தீ விபத்தில் சுற்றுலாப் பயணி பலி! 2 பேர் படுகாயம்!

ஹிமாசல பிரதேசத்தின் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான ரித்தேஷ், அஷிஷ் மற்றும் அவ்தூத... மேலும் பார்க்க

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஏற்காடும் ஒன்று. இங்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாள்களில் சுற... மேலும் பார்க்க