எம்எல்ஏ ,எம்பி, உள்ளாட்சித் தேர்தல்களை விஞ்சிய மன்னார்குடி வர்த்தக சங்க தேர்தல்...
தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் தங்கம் விலை இன்று (டிச. 24) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 56,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 56, 800-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து கிராம் ரூ. 7,100-க்கும், சவரன் ரூ. 56, 800-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது!
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 7,090-க்கும் சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 56,720-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 98.90-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,900- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.