ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்ப...
தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க நகைகளை வாங்க மக்கள் முனைப்பு காட்டும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 9,390 -க்கும், ஒரு சவரன் ரூ. 75,120 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 130 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,30,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த 20-ஆம் தேதி பவுனுக்கு ரூ.440 குறைந்து, 21-ஆம் தேதி ரூ.400 உயா்ந்து, 22- ஆம் தேதி பவுனுக்கு ரூ.120 குறைந்து, சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து விற்பனையானது. திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 800 குறைந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ. 400, இன்று கிராமுக்கு ரூ. 280 அதிகரித்தது.