செய்திகள் :

தங்கம் விலை முதல்முறையாக ரூ.1 லட்சத்தை தொட்டது!

post image

மும்பை: 10 கிராம் தங்கத்தின் விலை சில்லறை சந்தையில் முதல்முறையாக ரூ. 1 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார கொள்கை மாற்றங்களால் சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில், இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 1 லட்சம் என்ற அளவை தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை(ஏப். 22) காலை நிலவரப்படி, 10 கிராம் தங்கம் சில்லறை சந்தைகளில் ரூ.1,02,794-க்கு விற்பனையாகிறது.

24 கேரட் எனப்படும் 99.99% பரிசுத்தமான தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.99,800-க்கும், (22 கேரட்)99.5% பரிசுத்த தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.99,300-க்கும் விற்பனையாகிறது என்று இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான ‘அனைத்து இந்திய சர்ஃப்ரா சங்கம்’ தெரிவித்துள்ளது.

இதனுடன், தங்கத்துக்கான 3% ஜிஎஸ்டி-யையும் சேர்த்தால் 10 கிராம் 99.99% பரிசுத்த தங்கத்தின் மொத்த விலை ரூ.1,02,794-க்கு விற்பனையாகிறது. 99.5% பரிசுத்த தங்கத்தின் மொத்த விலை 10 கிராம் ரூ.1,02,279-க்கு விற்பனையாகிறது.

இந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை 26.41% உயர்ந்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், விலை மேலும் அதிகரிக்கும்!

ஜம்மு-காஷ்மீருக்கு புறப்பட்டார் அமித் ஷா!

சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்குப் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

'நாடாளுமன்றத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை' - உச்ச நீதிமன்றம் குறித்து ஜகதீப் தன்கர் மீண்டும் பேச்சு!

அரசியலமைப்பில் நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். மசோதாக்களை நிறுத்திவைத்ததாகக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வ... மேலும் பார்க்க

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸகி!

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் கவாஸகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ரேஸ் வாகனங்களுக்கு புகழ்பெற்ற கவாஸகி நிறுவனம் நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.7.27 லட்சமாக ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத... மேலும் பார்க்க

சௌதி அரேபியாவில் பிரதமர் மோடி! 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு!

சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக... மேலும் பார்க்க

குஜராத் குடியிருப்புப் பகுதியில் விழுந்த பயிற்சி விமானம்!

குஜராத்தில் குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.அம்ரேலி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பயிற்சி நிறுவனத்... மேலும் பார்க்க