தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்!
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:
தஜிகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அட்சரேகை: 37.98 ஆகவும், நீளம் 72.87 ஆகவும் இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு, இப்பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அதன் ஆழம் 92 கி.மீ ஆக இருந்தது.
இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல் இல்லை.
தஜிகிஸ்தான் பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்ட ஒரு மலை நாடு என்பதால் காலநிலை ஆபத்துக்களால் பாதிக்கப்படக்கூடியது. இதனால் நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி, பனிச்சரிவுகள், நிலச்சரிவுகளால் அடிக்கடி நிலவுகின்றது.
2050-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீத பனிப்பாறைகள் மறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தஜிகிஸ்தானின் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது. தஜிகிஸ்தான் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.